Puyalile Oru Thoni புயலிலே ஒரு தோணி (Novel)
S**R
அருமையான நாவல்
ப. சிங்காரம் எழுதிய இரண்டே நாவல்களில் ஒன்று - புயலிலே ஒரு தோனி. இந்தோனேசியா நாட்டின், மெடான் நகரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே வட்டிக்கடை நடத்தி வந்திருக்கின்றனர். அவர்கள் கதையின் வழியாக, இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் வரலாற்றையும் பற்றி விவரிக்கிறது இந்தப் புத்தகம். மெடான் நகரில் ஆட்சி மாற்றம் துவங்கிய ஒரு அதிகாலையில் நுழையும் ஜப்பானிய துருப்புக்களை எதிர்நோக்கி நிற்கும் பொதுமக்கள் என துவங்குகிறது நாவல். ஆட்சி மாற்றத்தால் தளர்ந்த காவல் கட்டுப்பாடுகளை சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை, பலாத்காரம் என்று இறங்கி விட்டனர், சிலர். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!” என்ற வார்த்தைகள் அந்த கொடுமையான நிகழ்வுகளை விவரிக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மானிய படை ரஷ்யாவை தாக்கி முன்னேறிக் கொண்டிருப்பதால், ஜப்பானிய படை இந்தோனேசியாவை தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர் என தெற்காசியாவை நோக்கி முன்னேறுகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் இராணுவத் தளமான பேர்ள் ஹார்பர் தாக்கப்படுகிறது.மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பிய மெடான் நகரத்தில், பெட்டியடிப்பையன், அடுத்தாள், மேலாள் என வட்டிக்கடை வேலைகளை மெதுவாக ஆரம்பிக்கிறார்கள். பினாங்கு துறைமுகத்துக்கு வெளி நாட்டில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி கிடைத்ததும், அந்த புதிய தொழிலில் ஈடுபட பலரும் முன்வந்தனர். ஒரு சிறிய நகரில் கைகட்டி இருப்பதை விட, பினாங் போன்ற பெரிய நகருக்கு சென்று தொழிலில் முன்னேறவும், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறான், பாண்டியன். கதை ஓட்டத்தின் இடையே பல இடங்களில், தங்களது தாய்நாட்டின் அருமைகளையும், பால்ய நினைவுகளையும் அசைபோட்ட படியே செல்கிறது, புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்வு. அதுமட்டுமின்றி கடல் கடந்து வணிக அரசியல் உறவுகளை ஏற்படுத்தி வாணிபம் செய்து வந்த மூவேந்தர்களின் வரலாறும் நினைவு கூறப்படுகிறது. கதையின் போக்கை விவரிக்க பாண்டியன் மற்றும் அவனது நண்பர்கள் வார்த்தைகளைக் குறுக்கி வளைத்திழுத்துச் செட்டிநாட்டுப் பாணியில் பேசுவதையே தனது கதை சொல்லும் பானியாக உபயோகிக்கிறார். பினாங் நகரம் சென்ற பாண்டியனுக்கு, அதுவும் போரின் பிறகான எச்சங்களை சுமந்தபடியே காட்சி அளிக்கிறது. அதன் பிறகான இந்திய இராணுவப் படையில் பயிற்சி, அங்கு பாண்டியனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என வேறு திசையில் பயணிக்கிறது நாவல். பாண்டியனின் திறமையால், அவனுக்கு INA மேலிடம் வரை நற்பெயர் பெறுகிறான். புலம் பெயர்ந்த தமிழர்கள் கதைகள் நிறைய படித்திருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து இந்தோனேசியா, மலேசியா போன்ற கிழக்காசிய நாடுகளில் புலம் பெயர்ந்த மதுரை, திருப்பத்தூர் ஊர்களில் இருந்து சென்றவர்கள், உலகப் போரின் போது அவர்கள் வாழ்வு எவ்வாறெல்லாம் தடம் மாறியது என்பதை அந்தந்த நாட்டு வட்டார வழக்கு மொழிகளுடன் கலந்து எழுதி உள்ளார் ஆசிரியர். மட்டுமின்றி நண்பர்களின் உரையாடல்கள் நடைபெறும் போதெல்லாம் தமிழின் சங்க இலக்கியங்களையும், பாடல்களையும் மேற்குறிப்பிட்டு பேசும் காட்சிகள் சிறப்பு. பொருள் தெரிய கடினமாக உள்ள மலாய், ஜப்பானிய, டச்சு மொழி வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களுக்கு ஆங்காங்கே தமிழில் விளக்கமும் எழுதியிருப்பதால், அவர்கள் மொழியிலேயே இந்நாவலை மேலும் ரசிக்க முடிகிறது. தான் புலம் பெயர்ந்து பயணம் செய்த காலத்தையும் இடத்தையும் கச்சிதமாகப் புனைந்து எழுதிய ப. சிங்காரம் அவர்களின் அருமையான நாவல். ஊன்றிப் படிக்க வேண்டிய நூல்.Sankar.T.A.B,Ahmedabad.
M**R
Best
Best to read.
M**I
Good
Nice book
A**Z
Must read modern tamil classic
Must read modern Tamil classic novel for all new gen readers;
S**N
Average
It is an average book. couldn't read more than 50 pages. not fascinating. felt boring. I can say no for new readers.
R**N
Sailing In The Strom
வேசிகளின் உல்லாசத்தால், பல வாழ்ந்து கெட்டவர்களின் வரலாறோடு, வீழ்ந்த ஒருவனின் வீரத்தைக் கூறி, இரண்டாம் உலகப் போரின் புனைவுடன், இலக்கியத்தோடு உயிர்ப்பிக்கும் மரபாய், எழுத்தாளனின் பேனாவின் மை, என்றும் காயாமல், அவன் மறைந்தாலும் மகத்துவத்தோடு,புயலைக் கடந்து ஒரு தோணி,கடலுடன் கட்டிப் புரண்டு, அலையுடன் ஆரத் தழுவி,உடையாமல் கரையை அடைந்தது. உலகமே கிடந்து வியந்திட.இராம.திருவுடையான்.🌊🌪️🌪️🌊🛶💦🌀
R**N
Must buy
Recived on time with neat packing and in good condition.One of the great book I have red in recent times ..Worth it .don't hesitate to buy ...You ll enjoy it
M**H
Awesome book
The Book was awesome, and the packing very very safely and super.......Thanks For Tamilveli publications and Amazon......
Trustpilot
3 weeks ago
4 days ago